இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – ஒரு மாதத்திற்குள் 1,000 முறைப்பாடுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

(Visited 78 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!