இலங்கை: பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் , பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் அவர் தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 25 times, 1 visits today)