இலங்கை : கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் பெண்ணை தேடி வரும் பொலிஸார்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
கணேமுல்ல சஞ்சீவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் குறித்த படுகொலைக்கு துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவந்தவர் இந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.ஸ 01. பெயர் – பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
02. வயது – 25
03. என்.எச்.ஏ – 995892480வி
04. முகவரி – 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், கீழ் காணும் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்கள், 071 – 8591727 –
இயக்குநர், கொழும்பு குற்றப்பிரிவு – 071 – 8591735 OIC,