அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் விடுதலை
தேசிய மக்கள் சக்தியின் (NPP) களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டாஹச்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் மில்லனியா பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நமுனிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
500,000 சரீரப் பிணையில் ரவீந்திர நமுனியை கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுவித்ததுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவதூறான கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சி தனது சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டை தாக்கல் செய்த சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரே இந்த அவதூறுகளின் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.