இலங்கை : திருடப்பட்ட சொத்துக்களை மீட்க 03 புதிய சட்டங்களை கொண்டுவர திட்டம்!
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (04.12) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், குற்றச் செயல்கள் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம் மற்றும் கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் அதற்கேற்ப சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.





