இலங்கை

இலங்கை – வளவ கங்கையில் நீராடச்சென்ற நபர் உயிரிழப்பு

பலாங்கொடை கல்தொட்ட வளவ கங்கையில் நீராடச்சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் குருவிட்ட மில்லெனிய பிரியசெவன பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய அதுகோரலஆராச்சிலாஙே காமினி ரஜ்ஜித் விஜயசேகர என்பவரே உயிரிழந்துள்ளார். ஒய்வு பெற்ற புகையிரத திணைக்கள அதிகாரி என தெரியவந்துள்ளது.

இவர் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பலாங்கொடை கூரகல புனித பூமியில் நடைபெறும் வெசாக் நிகழ்வுகளை பார்வியிட குருவிட்ட பிரதேசத்தில் இருந்து குடும்ப சகிதம் வந்துள்ளார்.

தனது குடும்ப சகிதம் கல்தொட்ட வளவ கங்கையில் நீராடச்சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்தொட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை கல்தொட்டை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்