இலங்கை: தேசியப்பட்டியல் ஆசனம் : ரவியின் இல்லத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகை யில், ரவி கருணாநாயக்கவின் வீடு முற்றுகையிடப்பட வேண்டும் எனவும், இந்த முடிவை மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பத்தரமுல்லையில் உள்ள ரவி கருணாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே இன்று காலை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு (NDF) ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானியில் வெளியிட்டது.
(Visited 1 times, 1 visits today)