இலங்கை – மித்தெனிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது!
இலங்கையில் தந்தை மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (21) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், மித்தெனிய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அருணா விதானகமகே, அவரது மகள் மற்றும் மகனின் இறுதிச் சடங்குகள் குடகலர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன, இன்று மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளன.
(Visited 11 times, 1 visits today)





