இலங்கை : அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மஹிந்தானந்த அளுத்கமகே!
அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (16.11) கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவரின் சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இவ்வருடம் நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
என்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.





