முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
அதன்படி, 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)