முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது.
அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் ஆகா(Salman Agha) 105 ஓட்டங்களும் ஹுசைன் டலட்(Hussain Talat) 62 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில், 300 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் வணிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) 59 ஓட்டங்களும் சதீர சமரவிக்ரம(Sadeera Samarawickrama) 39 ஓட்டங்களும் பெற்றனர்.
இறுதியில், முதலாவது ஒருநாள் போட்டியில் 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது 105 ஓட்டங்கள் பெற்ற சல்மான் ஆகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.





