இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்
 
																																		2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும்.
அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும்,
மேலும் 25 நிர்வாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி பிரிவுகளில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 5783 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
