இலங்கை : நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என கெஹலிய அறிவிப்பு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)