HMPV வைரஸ் தொடர்பில் விழிப்புடன் இருக்கும் இலங்கை : சபையில் வழங்கிய உறுதிமொழி!
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் வைத்தியர் நிஷாந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்றுநோயியல் பிரிவு இது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு தொடர்ந்து அறிக்கைகளை வழங்கி வருவதாகக் கூறினார்.
வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் குறித்து தகவல் கிடைத்தால், அது குறித்து நிச்சயமாகத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், சுகாதார மேம்பாட்டு பணியகம் சமீபத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது, இது ஒரு பொதுவான சுவாச வைரஸ் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)