அரசியல் இலங்கை செய்தி

“கணக்காய்வாளர் நாயகம் இல்லாத நாடாக இலங்கை”

கணக்காய்வாளர் நாயகம் Auditor General இல்லாத நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர Dayasiri Jayasekara தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்நாட்டில் ஊழல், மோசடிகளுக்கு எதிராக அதிகளவில் குரல் கொடுத்த கட்சிதான் ஜே.வி.பி. (JVP. அக்கட்சியின் ஆட்சியின்கீழ் கணக்காய்வாளர் நியமனம் இழுபறியில் இருப்பது வேதனையளிக்கின்றது.

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடாளுமன்றத்தில் கோப் (COPE) மற்றும் கோபா (COPA) குழு கூட்டங்களை நடத்த முடியாது. எனவே, எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயரை அரசமைப்பு பேரவை ஏற்க வேண்டும் என்ற மனோநிலையில் இருந்தே ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது.

ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் என்.பி.பி. ஆட்சியிலும் இடம்பெறுகின்றன. இது தவறு. நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவரின் பெயரை அரசமைப்பு பேரவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல கணக்காய்வாளர் நாயகம் விவகாரமானது தற்போது இலங்கை அரசியல் களத்தில் பிரதான விவாதமாக மாறியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!