இலங்கையில் புதிய ஒன்லைன் விசா முறை அறிமுகம் : வெளியான முக்கிய அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய வீசா முறைமை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை 17.04.2024 முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதிய வீசா முறைமை, உரிய கட்டணங்கள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை 27.11.2023 தேதியிட்ட 2360/24 வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.(சம்பந்தப்பட்ட வர்த்தமானியை www.documents.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).
GBS Technology Service & IVS Global Institute உடன் இணைந்து E-Visa முறையை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன – தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படும் ஆன்லைன் முறை மற்றும் அதன் இணைய இணைப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்களுக்கும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமானது, மேற்கூறியவாறு இணையவழியில் விசாவிற்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவருவதற்கும், விசா பெறுவதற்கு வசதி செய்து, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், விரைவாகவும் திறமையாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்க உத்தேசித்துள்ளது.