இலங்கை

இலங்கை இந்திய ஒப்பந்தம் ;ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,ஜனாதிபதி மற்றும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொற்று நேற்யைதினம் (21) இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பில் நல்லிணக்கம், காணி, மீள் குடியமர்தல், தமிழக அகதிமுகாமில் இருக்கும் இலங்கையர்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு விடயங்கள், வடக்கு – கிழக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டபோது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் தேசிய கூட்டடைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

President to attend UNGA in September – The Island

சுமார் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த மிதவாத கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம்தான் தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்திருந்தனர். ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்ப படியாக கொண்டு எமது மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்கு அதனை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்திவந்தது.

“ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்” என்ற போதும், யுத்தம் வலுவான உச்ச நிலையில் இருந்தபோதும் நாம் இதனையே விடாப்பிடியாக வலியுறுத்திவந்திருக்கின்றோம்.
ஐ.நா மனித உரிமை பேரவையும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே கூறியிருக்கின்றது. அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட்ட விடயமாக இருப்பதனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் தடையேதும் இருக்கப்போவதில்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஏனைய மிதவாத அரசியல் குழுக்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசியலமைப்பை தும்புக்கட்டையால் கூட தொட்டுப்பார்க்க முடியாது என வீர முழக்கமிட்டனர்.

ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா மிக நீண்ட அரசியல் பார்வையுடனும் தீர்க்கதரிசனமாகவும் துல்லியமான முறையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் 13 ஆவது அரசியலமைப்பை செயல்படுத்தி அதிலிருந்து மேலும் நாம் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தார். அதனையே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றத்திலும் வெளிநாடுகளின் தூதுவர்களிடமும் வலியுறுத்தியும் வந்திருந்தார்.

TNA likely to support Sajith – TNA MP | Daily News

70 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாத மிதவாத கட்சிகளும் பெரும் சட்டத்தரணிகளை கொண்டு அரசியல் நுட்பங்களை அறிந்த தத்துவ வித்தகர்களும் உள்ளதாக கூறப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இதுவரைகாலமும் எந்தவிதான அரசியல் தீர்வையோ அல்லது அரசியல் பொதியையோ முன்வைத்திருக்கவில்லை.தன்னாட்சி, சுயநிர்ணயம், தேசியம் என பேசிக்கொண்டிருந்தார்களே தவிர தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை தேடிக்க ண்டுபிடிக்கவில்லை. அதற்கான திட்டமும் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. தேர்தல் அரசியலை மட்டுமே இலக்காகக் கொண்டு நாளொரு பொய்யும் பொழுதொரு புழுகுமாக வீறாப்பாகவும் ஆக்ரோசமாகவும் அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்திவந்த வழிமுறையை பின்பற்றிய கூட்டமைப்பு நேரடியாக ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை முற்படுத்தியுள்ளனர்.கடந்தகாலங்களில் கடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டது போன்றல்லாது இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி வெளிப்படைத் தன்மையுடனும் இதயசுத்தியுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காற்றுமாயின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய அதனை முழுமையாக வரவேற்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்