விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தால் இலங்கைக்கு வருடாந்தம் 20 பில்லியன் ரூபா இழப்பு
இலங்கைக்கு விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் காரணமாக 17 – 20 பில்லியன்.ரூபா வருடாந்த இழப்பு ஏற்படுவதாக Hector Kobbekaduwa Agrarian Research and Training Institute மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, காட்டு விலங்குகளினால் ஏற்படும் சேதங்களினால் வருடாந்தம் 31,000 மெற்றிக் தொன் மரக்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைகள் இழக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இருந்தபோதிலும், வன விலங்குகளால் பயிர் சேதத்தை தடுப்பதற்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட அனைத்து உத்திகளும் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், 2022 ஆம் ஆண்டில் குரங்குகளால் அழிக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 200 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)