இலங்கையில் ரைஸ், கொத்து உள்ளிட்ட பல பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை
இலங்கையில் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இதனை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் நுகர்வோரைக் காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விலை விரைவில் மக்களுக்கு அறிவிக்கப்படும்.
இதன்படி, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள், குடிநீர் போத்தல்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ரைஸ், கொத்து உள்ளிட்ட பல உணவகப் பொருட்களுக்கு இந்த அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படவுள்ளது.