இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி
இலங்கையில் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், இந்த அளவு செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான நிலையில், அதன் எண்ணிக்கை 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
(Visited 5 times, 1 visits today)





