இலங்கை : பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்வி அமைச்சில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கம், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)





