இலங்கை: ரணிலை பாராட்டிய IMF பிரதிநிதிகள்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்று மலர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து குறித்த குழுவினர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் ஆற்றிய பணியை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியதாக இதில் கலந்து கொண்ட முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)