இலங்கை சுகாதார அமைச்சின் முன்நடந்த போராட்டம்: 09 பேர் கைது
சுகாதார அமைச்சின் முன் போராட்டம் நடத்தியதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (ஐ.யு.எஸ்.எஃப்) ஒருங்கிணைப்பாளர் உட்பட ஒன்பது பேர் (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்தக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக, கொழும்பில் உள்ள மருத்துவமனை சதுக்கத்திலும் சுகாதார அமைச்சின் சுற்றுப்புறத்திலும் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை (மே 17) மாலை 05.00 மணி வரை மருத்துவமனைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் போராட்டக்காரர்கள் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு தடை விதித்தது.





