எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர்
உலகளாவிய எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கடந்த நெருக்கடி
ஆண்டுகளை விட இலங்கை தற்போது சிறந்த நிலையில் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்
ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்புகள் அதிகரித்துள்ளதுடன், பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாக காணப்படுவது பொருளாதாரத்திற்கு
பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனாலும் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால், பெட்ரோலிய விலை உயர்வு இலங்கையின் பணவீக்கம் மற்றும் கொடுப்பனவு சமநிலையை பாதிக்கக்கூடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்தார்.
எனினும், நெருக்கடி காலத்தில் 70 சதவீதமாக உயர்ந்திருந்த பணவீக்கத்தை ஒப்பிடுகையில், தற்போது நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளதாகவும், நாடு முன்பைவிட இந்த முறை வலுவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் மோதல் நீடித்தால் அது பெட்ரோலிய சந்தைகள், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதிக்கக்கூடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.





