எலான் மஸ்கின் திட்டத்திற்கு பூர்வாங்க அனுமதி வழங்கிய இலங்கை
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ மக்களிடம் கலந்தாலோசித்ததன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை (07) அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)