கசினோவிற்கு அதிக வரி வசூலிக்கும் நாடாக மாறிய இலங்கை!
இலங்கையில் தற்போது கசினோ நிலையங்களில் இருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக அமைச்சர் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதன்னபடி அரச வருவாயில் கசினோ ஒன்றின் வருவாயில் 60 வீதத்தை அரசாங்கம் சேர்க்க முடிந்ததாக கூறியுள்ளார்.
முன்னதாக கசினோக்களில் இருந்து வருமான வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது உரிமத்திற்காக 50 கோடியும், ஆண்டு புதுப்பித்தலுக்கு 50 கோடியும், புரள்வுச் செலவில் 15% கசினோக்களில் இருந்து வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மாநில வருமானத்தை உயர்த்துவது மற்றும் சில வணிகங்களை ஊக்கப்படுத்துவது மற்றும் வரி வசூலிப்பது போன்ற எதிர்பார்ப்புகளை அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, உலகில் கசினோக்களுக்காக அதிக வரி வசூலிக்கும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.