இலங்கை: 3 மணிநேர வாக்குமூலத்திற்குப் பிறகு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறிய கோட்டாபய!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகி விளக்கமளித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்றைய தினம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஏலவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
(Visited 1 times, 1 visits today)