இலங்கை பொதுத் தேர்தல்! கட்சிகளுக்கான சின்னங்கள் வெளியீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அந்த வர்த்தமானியில் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படாத சின்னங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
2024 செப்டம்பர் 28, திகதியிடப்பட்ட வர்த்தமானி 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பொதுத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
(Visited 18 times, 1 visits today)