இலங்கை பொதுத் தேர்தல் – வாக்களிப்பை தவிர்த்த லட்ச கணக்கான மக்கள்
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் லட்ச கணக்கான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 667, 240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 17,140,354 வாக்காளர்கள் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் சுமார் 11,815,246 பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 5,325,108 வாக்காளர்கள் அடங்கிய குழு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)





