இலங்கை பொதுத் தேர்தல் – வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இரு தினங்களில்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்னும் இரு தினங்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விருப்பு இலக்கங்களுடன் கூடிய வேட்பாளர்களின் ஆவணங்கள் ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
விருப்பு இலக்கங்கள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் உரிய ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)