இலங்கை: உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் நான்கு பேர் பதவியேற்பு
புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவும் கலந்து கொண்டார்.
(Visited 12 times, 1 visits today)





