இலங்கை – மருந்து கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்காத முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையில் தரமற்ற மருந்துகளை கொண்டு வந்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர் திரன் அலஸ், முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமர்வீர ஆகியோர் வாக்குமூலங்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகறிது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், முதலாவது சந்தேக நபரான நிறுவனத்தின் உரிமையாளர் சுதத் ஜானக பெரேரா சிறைச்சாலையினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முதலாம் சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு கோரிய நீதவான், பிணை வழங்க மறுத்ததோடு, முதலாம் சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஏனைய 11 சந்தேக நபர்களையும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.