இலங்கை : தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணை ஒன்றுக்கு அமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
குற்றச்சாட்டுகள் மற்றும் அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
(Visited 10 times, 1 visits today)