இலங்கை செய்தி

இலங்கை: சமூகவலைத்தளம் ஊடாக போதைப்பொருள் விற்பனை – முன்னாள் ராணுவ சிப்பாய் கைது

பண்டாரவளை நகரில் வட்ஸ்எப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் பெறுமதியான சிறிய பக்கட்கள் கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில் தங்கியுள்ள வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை நகரிலுள்ள வாடகை வீட்டில், பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், சந்தேக நபர் ஹெரோயினை சிறிய பக்கட்களில் பொதி செய்து கொள்வனவு செய்பவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், அதன் போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!