இலங்கை – புகையிரத சுரங்கப்பாதையில் மோதுண்ட வெளிநாட்டவர் மரணம்

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டவர் சுரங்கத்தில் மோதியதில் உயிரிழந்துள்ளதாக நானுஓயா புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு பயணத்த ரயிலில் எல்ல புகையிரத நிலையத்திற்கு பயணித்த வெளிநாட்டவர் புகையிரத சுரங்கப்பாதையில் இன்று (03) மோதுண்டு மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
நானுஓயா மற்றும் இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான 19வது புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த வெளிநாட்டவர் சடலமாக மீட்கப்பட்டார், உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)