இலங்கை

இலங்கை – முன்விரோதம் காரணமாக மருமகனை அடித்தே கொன்ற மாமனார் மற்றும் மைத்துனர்

களுத்துறை, பதுரலிய – சீலதொல பகுதியில் மாமனார் மற்றும் மைத்துனரால் பொல்லால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மருமகன் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுரலிய – பதுருகல்லவத்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மருமகனே உயிரிழந்துள்ளார்.சம்பவத்தன்று, உயிரிழந்த மருமகன் முன்விரோதம் காரணமாக தனது மாமனார் மற்றும் மைத்துனரை கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாமனாரும் மைத்துனரும், மருமகனையும் மகளையும் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, மருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, சந்தேக நபர்களான மாமனாரும் மைத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மொரப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 72 வயதுடையவர்களாவர்.சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்