இஸ்ரேலின் புதிய திட்டத்திற்கு அதிருப்தி வெளியிட்டுள்ள இலங்கை!

காசா பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இது தொடர்பில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவு காசா பகுதியில் வன்முறையை மேலும் அதிகரிக்கும் என்றும், அந்தப் பகுதியில் உள்ள மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் அது கூறுகிறது. அதன்படி, இலங்கை உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
மேலும் அனைத்து தரப்பினரும் இராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் தங்கள் வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கு முன்னேற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
(Visited 1 times, 1 visits today)