மியான்மர் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை இரங்கல்

மியான்மர் மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஒற்றுமையுடன் நிற்கிறது என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து மற்றும் மியான்மரில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும், யாங்கோன் மற்றும் பாங்காக்கில் உள்ள அந்தந்த இலங்கை தூதரகங்களுடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 3 times, 1 visits today)