இலங்கை : எலிகாய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
 
																																		இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 பேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் அஹெலியகொட, கிரியெல்ல, அலபத, பல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட பிரதேசங்கள் எலிக்காய்ச்சல் அபாயம் உள்ள பிரதேசங்களாகும்.
எலிக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் சிறுநீரகம், இதயம், மூளை போன்ற உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு டொக்சிசைக்ளின் மருந்தை பிராந்திய சுகாதார சேவை உத்தியோகத்தர் அலுவலகத்திலோ அல்லது பொதுச் சுகாதார பரிசோதகரிடமோ களப்பணியை ஆரம்பிக்க ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றுக் கொள்ள முடியும் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.
 
        



 
                         
                            
