இலங்கை செய்தி

சீன பொறியியலாளர்களை பணியமர்த்துவது பற்றிய செய்திக்கு இலங்கை மின்சார சபை மறுப்பு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெற்றுக்கொடுக்க தயாராகி வருவதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் பரப்பப்படும் விடயங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்னவின் கையொப்பத்துடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்களின் சேவையை பெறுவதற்கு தயாராகி வருவதாக வெளியான செய்திகள் பொய்யானதும் அடிப்படையற்றதுமாகும்.

இலங்கை மின்சார சபையின் தற்போதைய வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

அந்த குழுவில் இருந்து பொருத்தமான பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 400க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் 19 பேர் தெரிவு செய்யப்பட்டு ஆட்சேர்ப்புக்கான அனுமதியைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை உரிய அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு சீன பொறியியலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள வெற்றிடங்களுக்கு உள்ளுர் பொறியியலாளர்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சோ அல்லது மின்சார சபையோ எந்தவொரு கொள்கை முடிவுகளையும் அனுமதியையும் பெறவில்லை என இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை