இலங்கை தேர்தல் – சுயாதீன வேட்பாளராக களமிறங்கும் ரணில்

இலங்கை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலைியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் அவரது சகோதரர் சன்ன விக்ரமசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா மற்றும் சட்டத்தரணி யசஸ் டி சில்வா ஆகியோர் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினர்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.
(Visited 48 times, 1 visits today)