இலங்கை செய்தி

இலங்கை தேர்தல் – வேட்பாளர் தொடர்பில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

தமது கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளரை நியமித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முன்னெடுத்து, அந்தக் கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய ஒருவரே நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் வாக்கு கேட்க மட்டும் வந்தவர்களும் தற்போது தனித்து சென்று தமது கட்சியிடம் வாக்கு கேட்பவர்களுடன் கூட்டணி அமைக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சியுடன் இணைந்து வெற்றிபெற முடியாது என ஜனாதிபதியுடன் இருப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை