இலங்கை தேர்தல் களம் : சில தொகுதிகளில் முன்னணி வகிக்கும் சஜித்!
மொனராகலை மாவட்டத்தில் மொனராகலை வாக்களிப்புப் பிரிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மொத்தமாக 42,111 வாக்குகளைப் பெற்று அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாச – 42,111
ரணில் விக்கிரமசிங்க – 36,736
அனுரகுமார திஸாநாயக்க – 9,625
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தில் பிபிலை வாக்களிப்பு பிரிவில் பிரேமதாச 29,952 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாச – 29,952
அனுரகுமார திஸாநாயக்க – 28,639
ரணில் விக்கிரமசிங்க – 9,461
கேகாலை மாவட்டத்தில் கேகாலை வாக்குச் சாவடியில் NPP கட்சியின் அனுரகுமார திஸாநாயக்க 28,994 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க – 28,994
சஜித் பிரேமதாச – 14,755
ரணில் விக்கிரமசிங்க – 11,067
இதற்கிடையில், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல வாக்களிப்புப் பிரிவின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.
சஜித் பிரேமதாச – 30,363
அனுரகுமார திஸாநாயக்க – 27,501
ரணில் விக்கிரமசிங்க – 21,556
இரத்தினபுரி மாவட்டத்தில் கொலொன்ன வாக்குச் சாவடியில் NPPயின் திஸாநாயக்க 55,788 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அனுரகுமார திஸாநாயக்க – 55,788
சஜித் பிரேமதாச – 45,074
ரணில் விக்கிரமசிங்க – 15,238
திஸாநாயக்க 52,380 வாக்குகளைப் பெற்று அனுராதபுரம் மாவட்டத்தில் கலாவெவ வாக்களிப்பு பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க – 52,380
சஜித் பிரேமதாச – 31,603
ரணில் விக்கிரமசிங்க – 16,136