இலங்கை: ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல் உத்தரவு !

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் முன்னிலையான நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 18 times, 1 visits today)