இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்திய இலங்கை

இலங்கை அரசாங்கம் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று நடைபெறவுள்ளது.
இதனையொட்டி இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மேலும் அந்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 19 times, 1 visits today)