இலங்கை

இலங்கை : கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

கண்டி தேசிய வைத்தியசாலையில் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு செயலிழந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர்  சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

தற்போது 8000 நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கண்டி தேசிய வைத்தியசாலையில் 02 இருதய வடிகுழாய் அலகுகள் உள்ளன. ஒரு யூனிட் பழுதடைந்ததால், நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

மேலும், நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயறிதலுக்கு தேவையான பெருமளவிலான இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை அழைப்பாளர்  சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள 02 பல் எக்ஸ்ரே பரிசோதனை இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!