இலங்கை: யாழ்ப்பாணத்தில் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணப் பகுதியில் காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நிலவும் பாதகமான காற்றின் தர நிலைமைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தொழில் ரீதியாக மருத்துவப் பயிற்சியாளரான டாக்டர் உமாசுகி நடராஜா தாக்கல் செய்த ரிட் மனுவை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





