இலங்கை

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கையில் இலங்கையின் பல பகுதிகள்

இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் பாத்தஹேவாஹெட்ட, ஹரிஸ்பத்துவ, மெததும்பர, உடபலாத்த, பஹத்ததும்பர, உடதும்பர, தெல்தோட்டை, தொலுவ, யட்டிநுவர, உடநுவர, கண்டி மற்றும் கங்கவட்ட கோரளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல, ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, நாவுல, யட்டவத்த மற்றும் லக்கல பல்லேகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் உட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனெல்லை மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!