இலங்கை : பாரிய அளவு சரிவை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று (07) தினசரி வர்த்தகத்தின் முடிவில் விலைக் குறியீடுகளில் பாரிய சரிவு காணப்பட்டது.
இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் 712.90 புள்ளிகள் சரிந்து 14,660.45 புள்ளிகளாகவும், S&P SL20 விலைக் குறியீடு 268.51 புள்ளிகள் சரிந்து 4,264.84 புள்ளிகளாகவும் இருந்தது.
பகலில், 205 நிறுவனங்களின் பங்கு விலைகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளன, அவற்றில், கொமர்ஷல் வங்கி, HNB, சம்பத் வங்கி, மெல்ஸ்டாகார்ப் மற்றும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவு அனைத்து பங்கு விலைக் குறியீட்டின் சரிவுக்கு கணிசமாக பங்களித்தது.
இன்று காலை, கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடு முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 5% க்கும் அதிகமாக சரிந்ததால், வர்த்தகம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
அந்த நேரத்தில், S&P SL20 குறியீடு 5.30% சரிந்திருந்தது. இன்றைய பரிவர்த்தனை விற்றுமுதல் ரூ. 6.47 பில்லியன் ஆகும்.