இலங்கை: காலி சிறைச்சாலையில் மோதல்! 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி
காலி சிறைச்சாலையில் இரண்டு குழுக்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில், பூஸ்ஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர்கள் குழுவிற்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்டியாகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்தவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் மோதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்





